×

ரஷ்யா-ஜப்பான் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து


மாஸ்கோ: ரஷ்யா-ஜப்பான் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் உள்ள நானோ துறைமுகத்திற்கு வாரம்தோறும் கப்பல் போக்குவரத்து சேவை நடந்து வந்தது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு மற்றும் இரு நாடுகள் இடையேயான உறவு பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த கப்பல் போக்குவரத்து சேவை 2020ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. தற்போது, இந்த கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க ரஷ்யா அனுமதியளித்தது.

அதற்கு பிறகு தென்கொரியாவை சேர்ந்த சொகுசு கப்பல் தன் சேவையை ரஷ்யாவில் தொடங்கியது. 200 பயணிகள் வரை பயணம் மேற்கொள்ளும் வசதியுள்ள இந்த கப்பலில் 43 பயணிகளுடன் ரஷ்யாவில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் தென்கொரியாவில் உள்ள டொங்கே துறைமுக நகரத்தில் நின்றுவிட்டு பின்னர் ஜப்பான் நாட்டிற்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரஷ்யா-ஜப்பான் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து appeared first on Dinakaran.

Tags : Russia ,Japan ,Moscow ,Nano Port ,Ishikawa Prefecture, Japan ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு