×

அறச்சலூரில் அச்சுறுத்தும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

ஈரோடு: அறச்சலூர் கிராமங்களுக்குள் நடமாடும் சிறுத்தையை பிடித்து மக்களின் அச்சத்தை போக்க ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா, பழையபாளையம், ஊஞ்சப்பாளையம், வெள்ளிவலசு, வேமாண்டாம்பாளையம், ஓம் சக்தி நகர், சங்கரன்காடு, அட்டவணை அனுமன்பள்ளி போன்ற கிராம மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பின்னர், அவர்கள் கூறியதாவது: அறச்சலூர், நாகமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட எங்கள் பகுதியில் 4,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு சார்ந்த தொழில் செய்கிறோம். கடந்த, 14ம் தேதி வெள்ளிவலசு பெரியசாமி என்பவர் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த பசு மாட்டை மர்ம விலங்கு தாக்கி கொன்றது. அதற்கு அடுத்த 4 நாளில் ஓம்சக்தி நகரில் சண்முகசுந்தரத்தின் பசு மாட்டினை மர்ம விலங்கு கடித்து கொன்று இழுத்து சென்றது. இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துவிட்டன.

The post அறச்சலூரில் அச்சுறுத்தும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Arachalur ,Erode ,Erode Collector ,
× RELATED வெறிச்சோடிய கலெக்டர் அலுவலகம் 30க்கும் குறைவான மனுக்களே வந்தது