×

சீனாவுடன் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க செயல் திட்டம்: ஆய்வை தொடங்கியது நிதி ஆயோக்

புதுடெல்லி: இந்தியா -சீனா இடையேயான வர்த்தகத்தில் மருந்து தயாரிப்புக்கான மூலபொருட்கள், ரசாயனங்கள், ஆட்டோ தொழில் பாகங்கள், மருந்துகள் போன்றவற்றை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் சில குறிப்பிட்ட துறைகளில் இந்திய பொருட்களை ஏற்றுமதி செய்ய சீனா அனுமதிக்கவில்லை. வர்த்தக பற்றாக்குறை என்பது இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்ந்து விவாதிக்கப்படும் முக்கிய விஷயமாகும். இந்நிலையில்,வர்த்தக பற்றாக்குறையை குறைக்க ஒரு விரிவான செயல் திட்டத்தை வகுப்பதற்கு நிதி ஆயோக் ஆய்வு மேற்கொண்டுள்ளது. வர்த்தக பற்றாக்குறையை குறைப்பதற்கான ஒரு விரிவான செயல் திட்டத்தை உருவாக்குவது இதன் முக்கிய நோக்கம். வளர்ந்து வரும் புவிசார் அரசியல் சூழ்நிலை மற்றும் வினியோக சங்கிலிகளை பாதுகாப்பதற்கான சாத்தியமான அபாயங்களுடன் வர்த்தக உத்திகளை சீரமைக்கும். சீனாவுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியாவிற்கு நன்மை அளிக்கும் விதமாகவும், சீனாவில் கணிசமான சந்தை உள்ள தயாரிப்பு வகைகளையும் ஆய்வு செய்யும். தவிர, உலகளாவிய வினியோகச் சங்கிலிகளை இந்தியாவிற்கு ஈர்க்கவும்,அதில் கவனம் செலுத்த வேண்டிய துறைகள், வழங்குவதற்கான ஊக்கங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் போன்றவையும் இதில் இடம் பெறும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
கடந்த 2020ல் கல்வானில் இந்தியா மற்றும் சீனா ராணுவத்தினர் இடையே மோதல் நடந்தது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.2022ல் அருணாச்சல பிரதேசத்தில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டனர். இந்த மோதல் சம்பவங்களுக்கு பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

The post சீனாவுடன் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க செயல் திட்டம்: ஆய்வை தொடங்கியது நிதி ஆயோக் appeared first on Dinakaran.

Tags : China ,Niti Aayog ,New Delhi ,India ,
× RELATED சீனாவில் மலைப்பாதை சாலை சரிந்து...