×

பதவியிலிருந்து நீக்கப்பட்ட காங். மாவட்ட தலைவர் மேலிட பொறுப்பாளரின் திடீர் விசாரணையால் பரபரப்பு: சத்தியமூர்த்திபவனில் குவிந்த நிர்வாகிகள்

சென்னை: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தவர் செங்கம் குமார். இவர் மீது காங்கிரஸ் சொத்து விவகாரம் தொடர்பாக டெல்லி தலைமைக்கு புகார் சென்றது. இதையடுத்து, செங்கம் குமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிருந்து நீக்கம் செய்யப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளரான செங்கம் குமார், தன் மீது எந்த தவறும் இல்லை என்று ஆதாரங்களுடன் டெல்லி தலைமையிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் மற்றும் 25க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் டெல்லி தலைமையிடம் நேரில் சென்று முறையிட்டாதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்த கட்சி தலைமை முடிவு செய்து, அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகி கொடிக்குன்னில் சுரேசு என்பவரை நேற்று சென்னை சத்தியமூர்த்திபவனுக்கு அனுப்பி வைத்தது. அவர் நேற்று செங்கம் குமாரிடம் விசாரணை நடத்தினார். அப்போது தன் மீதான புகாரை மறுத்து அதற்கான ஆதாரத்தை அவரிடம் சமர்ப்பித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர் அறிக்கையை தயார் செய்து மேலிடத்தில் ஒப்படைக்க உள்ளார். அதன் அடிப்படையில், மாவட்ட தலைவர் பதவியில் செங்கம் குமாரை மீண்டும் தொடரச் செய்வதா, இல்லையா என்பது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என்று காங்கிரசார் தெரிவித்தனர். இதற்கிடையே, செங்கம் குமாருக்கு ஆதரவு தெரிவித்து 25 மாவட்ட தலைவர்கள் கொடிக்குன்னில் சுரேசுவிடம் கடிதம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

The post பதவியிலிருந்து நீக்கப்பட்ட காங். மாவட்ட தலைவர் மேலிட பொறுப்பாளரின் திடீர் விசாரணையால் பரபரப்பு: சத்தியமூர்த்திபவனில் குவிந்த நிர்வாகிகள் appeared first on Dinakaran.

Tags : Congress ,Sathyamurthi ,Bhavan ,CHENNAI ,Sengam Kumar ,President ,Tiruvannamalai South District ,Sathyamurthi Bhavan ,
× RELATED தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பதவி ஏற்பு