×

தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் பொதுத்துறை பணியாளர்களுக்கு 25% போனஸ் வழங்க வேண்டும்

சென்னை: பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 2004 முதல் 20% மிகை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 2020, 2021ல் மட்டும் கொரோனா காரணமாக பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை காரணம் காட்டி 10% வழங்கப்பட்டது. தொழிலாளர்களும் வேறு வழியின்றி அதை ஏற்றுக் கொண்டனர். ஆனால், கடந்த ஆண்டில் இயல்பு நிலை திரும்பிய பிறகும் அதே 10% மட்டுமே மிகை ஊதியம் வழங்கப்பட்டது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த ஆண்டும் அதே அநீதி
தொடரக்கூடாது. மிகை ஊதியக் கணக்கீட்டுக்கான ஊதிய உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அதன் ஆண்டு சராசரியிலிருந்து தான் 20% மிகை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே தொகையே மிகை ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டில் மிகை ஊதியத்தின் அளவை 25% ஆக உயர்த்தி, உடனடியாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

The post தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் பொதுத்துறை பணியாளர்களுக்கு 25% போனஸ் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Tamil Nadu government ,CHENNAI ,Diwali ,PSU ,Dinakaran ,
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்