×

தென்னகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்து விதமான பயணிகளின் விருப்ப தேர்வாக உள்ளது: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: தெற்கு ரயில்வே தற்போது சென்னை-பெங்களூரு-மைசூரு, சென்னை – கோயம்புத்தூர், சென்னை – திருநெல்வேலி, சென்னை – விஜயவாடா, திருவனந்தபுரம் – காசர்கோடு வழியாக கோட்டயம் மற்றும் திருவனந்தபுரம் – ஆலப்புழா வழியாக காசர்கோடு ஆகிய ஆறு வழித்தடங்களில் சேவைகளை வழங்குகிறது. அனைத்து வந்தே பாரத் ரயில்களும், தொடங்கும் ரயில் நிலையத்திலிருந்தும், செல்லும் ரயில் நிலையங்களிலும் முழுமையாக முன்பதிவு செய்யப்படுகிறது. மேலும் அதிகளவில் 35-49 வயதுக்கு இடைப்பட்ட பயணிகள் அதிகளவில் பயணம் மேற்கொள்கின்றனர் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வந்தே பாரத் ரயில் பயணிகள் இடையே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் திருவனந்தபுரம் – ஆலப்புழா வழியாக காசர்கோடு ரயிலில் 35 சதவீதம் பேர் குடும்பமாகவும், 14 சதவீதம் பேர் வணிக காரணங்களுக்காகவும் பயணம் செய்துள்ளனர். இந்த ரயில் பயணித்த 26 சதவீதம் பேர் 35-49 வயதுக்கு இடைப்பட்டவர்கள். அதே போல காசர்கோடு – திருவனந்தபுரம் இடையே செல்லும் ரயிலில் 15 சதவீதம் பேர் சுற்றுலாவுக்கும், 14 சதவீதம் பேர் வணிக காரணங்களுக்காகவும் பயணம் மேற்கொள்கின்றனர்.

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரயிலில் 77 சதவீத குடும்பங்களும், 16 சதவீதம் பேர் வணிக காரணங்களுக்காக பயணம் செய்துள்ளனர். இந்த ரயில் பயணித்த 36 சதவீதம் பேர் 35-49 வயதுக்கு இடைப்பட்டவர்கள். கோவை – சென்னை ரயிலில் 71 சதவீத குடும்பங்களும், 11 சதவீதம் பேர் வணிக காரணங்களுக்காகவும், 7 சதவீதம் பேர் சுற்றுலாவுக்காகவும் பயணம் செய்துள்ளனர். இந்த ரயில் பயணித்த 28 சதவீதம் பேர் 35-49 வயதுக்கும், 21 சதவீதம் பேர் 25-34 வயதுக்கு இடைப்பட்டவர்கள். அதே போல சென்னை – மைசூர் வந்தே பாரத் ரயிலில் 71 சதவீத குடும்பங்களும், 11 சதவீதம் பேர் வணிக காரணங்களுக்காகவும், 7 சதவீதம் பேர் சுற்றுலாவுக்காகவும் பயணம் செய்துள்ளனர்.

இந்த ரயில் பயணித்த 28 சதவீதம் பேர் 35-49 வயதுக்கும், 21 சதவீதம் பேர் 25-34 வயதுக்கு இடைப்பட்டவர்கள். சென்னை – விஜயவாடா ரயிலில் 36 சதவீத குடும்பங்களும், 22 சதவீதம் பேர் வணிக காரணங்களுக்காகவும், 20 சதவீதம் பேர் சுற்றுலாவுக்காகவும் பயணம் செய்துள்ளனர். இந்த ரயிலில் பயணித்த 37 சதவீதம் பேர் 35-49 வயதுக்கும், 30 சதவீதம் பேர் 25-34 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இந்த தரவுகள் வந்தே பாரத் ரயில்கள் தொழில்முறை பயணிகளின் விருப்ப தேர்வாக இருப்பதை காட்டுகிறது. இந்த அதிவேக ரயில்கள் பயணிகளின் பயண நேரத்தை கணிசமாக மிச்சப்படுத்துகிறது, அதே நேரத்தில் உலகத்தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தென்னகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்து விதமான பயணிகளின் விருப்ப தேர்வாக உள்ளது: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Tags : Vande Bharat Trains ,Southern Railway ,Chennai ,Bengaluru ,Mysore ,Coimbatore ,Tirunelveli ,Vijayawada ,Thiruvananthapuram… ,
× RELATED வேலை வாங்கி தருவதாக மோசடி உஷாராக...