×

ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு; நடந்தது என்ன?.. காவல்துறை விளக்கம்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது; ஆளுநர் மாளிகைக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீதுதான் பெட்ரோல் குண்டு விழுந்தது. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ரவுடி கருக்கா வினோத் மீது 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன; பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மதுபோதையில் இருந்துள்ளார். பெட்ரோல் நிரப்பிய 4 பாட்டில்களில் ஒரு பாட்டிலை மட்டுமே வீசியுள்ளார் கருக்கா வினோத். கருக்கா வினோத்திடம் இருந்து பெட்ரோல் நிரப்பிய மேலும் 3 பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளோம். ரவுடி கருக்கா வினோத் எரிந்த பாட்டில் கீழே விழுந்த போதிலும் தீப்பிடிக்கவில்லை. ஆளுநர் மாளிகை வாயிலுக்கு முன் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், உடனடியாக கருக்கா வினோத்தை சுற்றி வளைத்தனர்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி பாதுகாப்புப் பணியில் எந்தக் குறையாடும் இல்லை. பெட்ரோல் குண்டு வீச முயன்றதன் நோக்கம் என்ன என்பது பற்றி, விசாரணைக்குப் பிறகே தெரியவரும் இவ்வாறு கூறினார்.

The post ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு; நடந்தது என்ன?.. காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Governor ,House ,Raudi Karuka Vinothta ,Kindi, Chennai ,Dinakaran ,
× RELATED அவைக்குறிப்பில் நீக்கியதை வீடியோவாக வெளியிட்ட ஆளுநர்