×

அரியவகை ஆந்தை மீட்பு: சத்தி வனத்தில் விடுவிப்பு


சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் பிடிபட்ட அரியவகை ஆந்தை மீட்கப்பட்டு வனத்தில் விடுவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர் பகுதியில் உள்ள பழைய மார்க்கெட் பகுதியில் ஆனை கொம்பு திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் முன்புற படிக்கட்டில் அரியவகை ஆந்தை ஒன்று நடமாடியது. இதை கண்ட மண்டபத்தின் உரிமையாளர் ஆனை கொம்பு ராம் உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வன ஆர்வலர் சந்திரசேகரன் மற்றும் வனத்துறையினர் திருமண மண்டபத்தில் நடமாடிய ஆந்தையை மீட்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர். இது அரியவகையை சேர்ந்த ஆந்தை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post அரியவகை ஆந்தை மீட்பு: சத்தி வனத்தில் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : Scarecrow ,Chariot Forest ,Satyamangalam ,Satyamangala ,Sathyamangalam Nagar ,Erode District ,Chadian Forest ,Dinakaran ,
× RELATED சத்தி வனச்சாலையில் கரடிகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் பீதி