×

ஜெர்மனி அருகே பயங்கரம்: 2 சரக்கு கப்பல்கள் நடுக்கடலில் மோதல்

பெர்லின்: ஜெர்மனி அருகே நடுக்கடலில் 2 சரக்கு கப்பல்கள் மோதியது. இதில் ஜெர்மனியின் கப்பல் சேதமடைந்து கடலில் மூழ்கியது. ஜெர்மனியில் இருந்து இங்கிலாந்து நாட்டின் இம்மிங்ஹாம் துறைமுகம் நோக்கி வெரிட்டி என்ற ஒரு சரக்கு கப்பல் புறப்பட்டது. இந்த கப்பல் சுமார் 300 அடி நீளமுடையது. ஜெர்மனிக்கு சொந்தமான ஹெல்கோலாண்ட் தீவு அருகே சென்றபோது எதிரே மற்றொரு கப்பலும் வந்தது. ஸ்பெயின் நோக்கி சென்ற அந்த கப்பல், திடீரென ஜெர்மனி கப்பல் மீது மோதியது. தகவலறிந்து கடலோர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

எனினும் இந்த விபத்தில் ஜெர்மனியின் கப்பல் சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதில் கப்பலில் இருந்த பலர் மாயமானதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஜெர்மனி அருகே பயங்கரம்: 2 சரக்கு கப்பல்கள் நடுக்கடலில் மோதல் appeared first on Dinakaran.

Tags : Germany ,Berlin ,Mediterranean Sea ,Germany… ,Dinakaran ,
× RELATED யுரோ கோப்பை கால்பந்து; ஸ்பெயின்,...