×

மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டேவுக்கு உத்தவ் தாக்கரே சவால்; உண்மையான சிவசேனா யார்? தேர்தலை நடத்துங்கள், தெரியும்

மும்பை: தேர்தலை நடத்தினால் உண்மையான சிவசேனா யார் என்பதை மக்கள் சொல்வார்கள் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதனை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்த் ஷிண்டேவுக்கு சவாலாக அவர் விடுத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து ஏக்னாத் ஷிண்டே ஒரு அணியாகவும், உத்தவ் தாக்கரே ஒரு அணியாகவும் இயங்கி வருகின்றனர். தற்போது, ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் பாஜவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளனர். ஏக்த் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், உண்மையான சிவசேனா யார் என்றால் தேர்தலை நடத்துங்கள், தெரியும் என்று உத்தவ் தாக்கரே கூறினார். மும்பையின் சிவாஜி மகாராஜ் பூங்காவில் நேற்று நடந்த தசரா விழாவில் அவர் கூறியதாவது: சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடினோம். இது தொடர்பான முடிவு உரிய நேரத்தில் எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார். இப்போது நான் என்ன சொல்கிறேன் என்றால், இதை மறந்து விடுவோம். தேர்தலை நடத்துங்கள். அதில் உண்மையான சிவசேனா யார் என்பதை மக்கள் தங்களது வாக்குகளின் மூலம் சொல்வார்கள்.

உங்களுக்கு சக்தி இருந்தால் தேர்தலை நடத்துங்கள். இதனை நான் சவாலாக தெரிவிக்கிறேன். உள்ளாட்சி, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துங்கள். நாங்கள் தான் ஆட்சி அமைப்போம். எங்களது சக்தியை உங்களுக்கு அதன் மூலம் சொல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டேவுக்கு உத்தவ் தாக்கரே சவால்; உண்மையான சிவசேனா யார்? தேர்தலை நடத்துங்கள், தெரியும் appeared first on Dinakaran.

Tags : Uddhav Thackeray ,Maharashtra ,Chief Minister ,Shinde ,Shiv ,Sena ,Mumbai ,
× RELATED அகழாய்வு பயணம் சரியான திசையில் செல்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!