×

காதர்பேட்டையில் உள்ள 3 பள்ளிவாசல் உட்பட ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்துகளை கையகப்படுத்தப்பட்டன

திருப்பூர்: காதர்பேட்டையில் உள்ள 3 பள்ளிவாசல் உட்பட ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்துகளை வக்பு வாரியம் கையகப்படுத்தியது. அஹ்லே சுன்னத் ஜமாத் பள்ளிவாசலுக்கு உட்பட மேலும் 2 பள்ளிவாசலை 30 ஆண்டு சலீம் என்பவர் நிர்வகித்து வந்தார். 140 கடைகள் உள்ளிட்டவற்றை 30 ஆண்டு நிர்வகித்து வந்த சலீம், முறைகேட்டில் ஈடுபட்டதாக 2013 ல் புகார் எழுந்தது. காதர்பேட்டை பூர்வீக ஜமாத்தார், வக்பு வாரியத்தில் அளித்த புகாரை அடுத்து பொறுப்பில் இருந்து சலீம் நீக்கப்பட்டார். நிர்வாக பொறுப்பில் இருந்து வக்பு வாரியம் நீக்கியதை எதிர்த்து சலீம் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரூ.100 கோடி மதிப்புள்ள 3 பள்ளிவாசல், 140 கடைகள் உட்பட அசையா சொத்துகளை வக்பு வாரிய அதிகாரிகள் கையகப்படுத்தினர்.

The post காதர்பேட்டையில் உள்ள 3 பள்ளிவாசல் உட்பட ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்துகளை கையகப்படுத்தப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Katharpet ,Tirupur ,Waqf Board ,Dinakaran ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...