×

ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக சார்பில் 20 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சர் எ.வ.வேலு நடத்தி வைத்தார்


தண்டையார்பேட்டை: சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் மேற்கு பகுதி திமுக சார்பில், மாவட்ட செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில், கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இன்று காலை பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் 20 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மேற்கு பகுதி செயலாளர் எஸ்.முரளி தலைமை தாங்கினார். அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகிய இருவரும், ஏழை குடும்பங்களை சேர்ந்த 20 ஜோடிகளுக்கு சீர்வரிசைகள் வழங்கி, திருமணத்தை நடத்தி வைத்தனர். இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், பகுதி செயலாளர் எஸ்.ராஜசேகர், மண்டலக் குழுத் தலைவர்கள் ராமுலு, கூ.பி.ஜெயின், கவுன்சிலர் டிஎஸ்பி ராஜகோபால், நிர்வாகிகள் நாகராஜன், சதீஷ்குமார், விஜயகுமார், தமிழ்வேந்தன், சாமிக்கண்ணு, சேப்பாக்கம் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

The post ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக சார்பில் 20 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சர் எ.வ.வேலு நடத்தி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : DMK ,Raja Annamalai Forum ,Minister ,AV Velu ,Thandaiyarpet ,Chennai ,East District ,Harbour ,West Region ,District Secretary ,PK Sekarbabu ,AV ,Velu ,
× RELATED சாலைகளில் ஆணியை புதைக்கிறது பாஜ அரசு...