சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 39 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1 முதல் 25 காலை வரை வழக்கமாக 129 மி.மீ. பெய்யும் நிலையில் 78.9 மி.மீ. பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் அக்டோபர் 29-ம் தேதி 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சையில் 29-ம் தேதி பலத்த மழை பெய்யும். புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 28-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை மட்டுமே பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பறிலை 25 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 39% குறைவு.. அக்.29-ல் 14 மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

