×

சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது: மேயர் பிரியா

சென்னை: சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பகுதியில் நேற்று காலை வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிசுந்தரம் (80) என்பவரை அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடு முட்டியதில் காயமடைந்தார். அவர் தலையில் காயம் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே திருவல்லிக்கேணி சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் முதியவரை மாடு முட்டிய விவகாரணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2 பிரிவுகளின் கீழ் ஐஸ்அவுஸ் காவல் நிலைய போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, ஆணையர் ராதாகிருஷ்ணன், திருவல்லிக்கேணி பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து 5 மாடுகளை பிடித்து, தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மாடுகளை சாலைகளில் சுற்ற விடக்கூடாது என்று அறிவுறுத்தியும் சில உரிமையாளர்கள் விட்டுவிடுகின்றனர் என்றும், மாடு முட்டியதால் பாதிக்கப்பட்ட முதியவர் கஸ்தூரி ரங்கன் நலமாக உள்ளார் என்றும் கூறினார். மீண்டும் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் பிரியா உறுதியளித்தார்.

The post சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது: மேயர் பிரியா appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mayor Priya ,Mayor ,Priya ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மேயர் பிரியா கண்டனம்