×

தமிழக வளர்ச்சிக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார்; அதை முறியடித்து தமிழகம் செயல்படும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழக வளர்ச்சிக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார்; அதை முறியடித்து தமிழகம் செயல்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, தி.மு.க ஆட்சியில் 6 ராஜ கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 13 திருத்தேர்கள் மராமத்து பணிகளுக்கு ரூ.7 கோடியே 58 லட்சரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்கள் புதுப்பிக்கப்பட்டு தற்போது வீதி உலா நடைபெற்று வருகிறது.

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோயிலுக்கு ரூ.85 லட்சம் செலவில் 5 இராஜகோபுரங்கள் கட்டுவதற்கும் , ரூ.53 லட்சத்தில் புதிய மரத்தேர், அன்னதான கூடம் ரூ. 49 லட்சம் செலவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. தி.மு.க ஆட்சியில் இதுவரை 1093 கோயிலுக்குக் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. சுமார் 5472 கோடி ரூபாய் மதிப்புள்ள 5820 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு உள்ளது.அறநிலையத்துறையில் இதுவரை அமைந்த ஆட்சியில் இல்லாத வகையில் தற்போதைய ஆட்சியில் திருப்பணிகள், ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.600 கோடி உபதார்களிடம் இருந்து பெறப்பட்டு உள்ளது. தி.மு.க ஆட்சி ஆன்மீக ஆட்சியாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழக வளர்ச்சிக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார்; அதை முறியடித்து தமிழகம் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழக ஆளுநராக செயல்படாமல் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக மாநிலத்தலைவராக அவர்களுடைய கொள்கைகளை பின்பற்றி செயல்படுகிறார். மனிதர்களை பிரித்தாள்வது, ஜாதிமத வேறுபாடுகள் பார்ப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவதை ஆளுநர் மேற்கொண்டுள்ளார். பொன்.மாணிக்கவேல் பணியில் இருந்தபோது அப்பாவி மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தமிழக வளர்ச்சிக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார்; அதை முறியடித்து தமிழகம் செயல்படும்: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Tamil Nadu ,Minister ,Shekharbabu ,Chennai ,Hindu Religious Charities Department ,Dinakaran ,
× RELATED கொலை வழக்கில் சரணடைபவர்கள்...