×

சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்குவிளைவிப்பதாக மெட்டா நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவின் 42 மாகாணங்கள் சார்பில் வழக்கு

வாஷிங்டன்: சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்குவிளைவிப்பதாக மெட்டா நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்கவின் 42 மாகாணங்கள் சார்பில் வழக்கு தொடரபட்டுள்ளது. அமெரிக்காவில் மெட்டா நிறுவனத்தின் பேஸ் புக் மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவோரில் 13.5% சிறுமிகளுக்கு தற்கொலை எண்ணமும், 17% பேருக்கு உண்ணும் பிரச்சனை இருப்பதாக ஆய்வரிக்கை வெளியானது. இதனை அடுத்து அமெரிக்காவின் 42 மாகானங்கள் சார்பில் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரபட்டுள்ளது. அதில் பயனர்களின் ஆரோக்கியத்தை விட வருமானத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதாக குற்றம் சாட்டபட்டுள்ளது.

குழந்தைகளை அடிமை படுத்தும் அம்சங்களை தெரிந்தே மெட்டா நிறுவனம் வடிவமைத்துள்ளதாகவும், இது தொடர்பான ஆபத்துக்கள் குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் பெற்றோரின் அனுமதியின்றி 13 வயதுக்கும் கீழ்வுள்ள சிறுவர்களின் தரவுகளை சேகரிப்பது, அமெரிக்க கூட்டாட்சி சட்டத்தை மீறும் செயல் என்றும் குற்றம் சாட்டபட்டுள்ளது.

The post சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்குவிளைவிப்பதாக மெட்டா நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவின் 42 மாகாணங்கள் சார்பில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : US ,Meta ,Washington ,America ,
× RELATED காசா தாக்குதலை கண்டித்து இஸ்ரேலிய...