×

தி.மலை மாவட்டம் செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து; 4 வழிசாலையாக விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே விபத்துகள் அதிகரிப்பதால் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கம் முதல் சிங்காரப்பேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலை குறுகலான 2 வழி சாலையாகவும், வளைவு சாலையாகவும் உள்ளது. இந்த சாலை கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர் மாவட்டங்களை மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களையும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.

ஆனால் தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் இந்த சாலையில் பயணிப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த ஆண்டு இதுவரை 30க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இருவழி சாலையை 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் தற்காலிகமாக ஆங்காங்கே வேகத்தடைகள் அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தி.மலை மாவட்டம் செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து; 4 வழிசாலையாக விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : National Highway ,Chengam, D.Malai District ,Thiruvannamalai ,Thiruvannamalai district ,Sengam ,
× RELATED திருச்சி – சென்னை தேசிய...