×

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை : திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, தாயகம் கவி பங்கேற்பு!!

சென்னை : வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் வருகின்ற 27ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசித்து வருகிறார். திமுக, அதிமுக, பாஜக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரதிநிதிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, தாயகம் கவி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், வழக்கறிஞர் இன்பதுரை மார்க்சிஸ்ட் சார்பில் ரவீந்திரநாத், வீரபாண்டி, காங்கிரஸ் சார்பில் நவாஸ், சந்திரமோகன், பாஜக சார்பில் கராத்தே தியாகராஜன், சவுந்திரராஜன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சத்திய மூர்த்தி, சார்ல்ஸ் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், நீக்கம் பற்றி அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பார்கள்.

இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடக்கும் காலக் கட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச் சாவடிகளில் வருகின்ற நவம்பர் 4 மற்றும் 5, நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வாக்காளர்களுக்கான முகாம் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாவட்டங்கள் வாரியாக ஜனவரி 5ம் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை : திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, தாயகம் கவி பங்கேற்பு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Electoral Officer ,R. S. Bharathi ,Homeland ,Kavi ,Chennai ,Chief Election Officer ,Satya ,R. S. Bharati ,Kavi Kavi Kavi ,
× RELATED வியாபாரிகள், பொதுமக்கள் ஆவணங்கள்...