×

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

நெல்லை, அக். 25: பணகுடி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் வள்ளியூர் சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன்(42) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் கடந்த 2 மாதங்களாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து நெல்லை கோர்ட் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. பணகுடி போலீசார் முத்துகிருஷ்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.நெல்லை அருகே சிவந்திப்பட்டி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் களக்காடு அக்ரகார தெருவை சேர்ந்த முப்பிடாதி(23) என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கோர்ட்டில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். தொடர்ந்து 4 மாத காலமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்ததால், நெல்லை மகிளா நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சிவந்திப்பட்டி போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

The post நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Paddy ,Panagudi Police ,Station ,Dinakaran ,
× RELATED வத்திராயிருப்பில் நெல் கொள்முதல்...