×

மின்சாரம் பாய்ந்து பக்தர் பலி

நெல்லை, அக்.25: நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே வடக்கன்குளத்தைச் சேர்ந்த இசக்கிவேல் மகன் சுரேஷ் (20). பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார். தற்போது இவர் குலசை தசரா விழாவை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார். சுரேஷ் 23ம்தேதி ராதாபுரம் அருகே கணக்கர்குளம் பகுதியில் வழக்கம்போல பழைய இரு்ம்புகளை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த இரும்பு கம்பி எதிர்பாராதவிதமாக அங்கு சென்ற மின்கம்பி மீது பட்டதால் மின்சாரம் பாய்ந்து, தூக்க வீசப்பட்டார். படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராதாபுரம் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் விசாரணை நடத்தி வருகிறார்.

The post மின்சாரம் பாய்ந்து பக்தர் பலி appeared first on Dinakaran.

Tags : Nellai ,Suresh ,Isaquivel ,Vadakankulam ,Radhapuram, Nellai district ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...