×

ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர் கைது

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். நீடாமங்கலம் கடைத்தெரு பகுதியில் எஸ்.ஐ நெடுஞ்செழியன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது மீன் மார்க்கெட் அருகில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நீடாமங்கலத்தை சேர்ந்த ரவி (55) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரவியை கைது செய்தனர்.

The post ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர் கைது appeared first on Dinakaran.

Tags : NEEDAMANGALAM ,NEEDAMANGALA. S. ,I Netunjeziyan ,Dinakaran ,
× RELATED திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் வேளாண். கல்லூரி மாணவர்கள் பயிற்சி