×

சிங்கபெருமாள் கோவில் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து டிரைவர் பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அடுத்த கடம்பூர் பகுதியில் இருந்து குளிர்பான பாட்டில்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில் திருக்கழுக்குன்றம் நோக்கி நேற்று மாலை சென்றது. சரக்கு வாகனத்தை மறைமலை நகர் காரை பகுதியை சேர்ந்த ஹரி (24) என்பவர் ஓட்டினார். சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் வேகமாக ஓடி சாலை ஓரம் இருந்த பனை மரத்தில் மோதி கவிழ்ந்தது.

இதில், டிரைவர் ஹரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மகேந்திரா சிட்டி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி டிரைவரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்க தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்தின் ஒரு பகுதியில் கயிறு கட்டி மற்றொறு கயிற்றினை சரக்கு வாகனத்தில் கட்டி இழுத்தனர்.

அப்போது, தீயணைப்பு வாகனத்தின் முன் பகுதி தனியாக பெயர்ந்து வருவது போல இருந்ததால் அந்த முயற்சியை கைவிட்டு அங்கு இருந்த பொது மக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்டனர். இச்சம்பவம் குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிங்கபெருமாள் கோவில் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Singaperumal ,Chengalpattu ,Kadampur ,Chengalpattu district ,Dinakaran ,
× RELATED வார விடுமுறை முடிந்து சென்னை திரும்ப...