×

வலுவிழக்கிறது ஹாமூன் புயல்; கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது: வானிலை மையம் தகவல்

டெல்லி: வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள மிகத் தீவிர புயலான ஹாமூன், தீவிர புயலாக வலுவிழக்கும் எனவும் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை அதே இடத்தில் நிலவியது. இது பரதீப் (ஓடிசா). மேற்கு தெற்கே சுமார் 360 கிலோ மீட்டர் தொலைவிலும், டிகா (மேற்கு வங்காளம்)- விற்கு தெற்கே தென்மேற்கே சுமார் 510 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவியது.

நேற்று(அக்.23) காலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை 5.30 மணி அளவில் ஹாமூன் புயலாக வலுப்பெற்று, இன்று(அக்.24) தீவிர புயலாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை 08.30 மணியளவில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக நிலவுகிறது.

மத்திய மேற்கு வங்கக்கடலில் ஹாமூன் புயல் உருவானதையடுத்து சென்னை, கடலூர், நாகை, எண்ணூர்,தூத்துக்குடி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள மிகத் தீவிர புயலான ஹாமூன், தீவிர புயலாக வலுவிழக்கும் எனவும் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று (அக்.23) மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர ‘தேஜ்’ புயல் இன்று (அக்.24) காலை தெற்கு அல்-கைதாக்கு மிக அருகில் ஏமன் கடற்கரையை கடந்தது.

The post வலுவிழக்கிறது ஹாமூன் புயல்; கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Storm ,Hamun ,Weather ,DELHI ,NORTHWEST ,NORTHEASTERN ,Storm Hamun ,Dinakaran ,
× RELATED ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தகராறு 3 பேர் காயம்: 4 பேர் மீது வழக்கு