×

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை: மேயர் சுந்தரி ராஜா உறுதி

கடலூர்: கடலூரில் நடைபெற்ற மக்களை தேடி மேயர் குறைகேட்பு முகாமில் மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் சுந்தரி ராஜா மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வார்டு பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் செயல்பாடு தொடர்பாக மக்களை தேடி மேயர் குறைகேட்பு முகாம் நடைபெற்று வருகிறது. கடலூர் முதுநகர் பகுதியில் மக்கள் குறை கேட்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

ஆணையர் காந்தி ராஜ், துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல குழு தலைவர் இளையராஜா வரவேற்றார். மாமன்ற உறுப்பினர்கள் கவிதா ரகுராமன், விஜயலட்சுமி செந்தில், நகர் நல அலுவலர் டாக்டர் எழில் மதனா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் முதுநகர் வார்டு பகுதி மக்கள் சாலை வசதி, குடிநீர், சுகாதாரம், வடிகால் வாய்க்கால் சீரமைத்தல், துறைமுக பகுதி மேம்பாடு உள்ளிட்டவைகள் குறித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் சுந்தரி ராஜா வார்டு பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும். திட்டப்பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். முதுநகர் பகுதியில் மேலும் பல மேம்படுத்தப்பட்ட திட்டங்கள் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.திமுக நிர்வாகிகள் சண்முகம், வெங்கடேசன், இளைஞர் அணி கோபி மற்றும் கோவேந்தன், ரகுராமன், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை: மேயர் சுந்தரி ராஜா உறுதி appeared first on Dinakaran.

Tags : Mayor Sundari Raja ,Cuddalore ,Mayor ,Sundari Raja ,
× RELATED மாநகராட்சி ஆணையரை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு