×

சேப்பாக்கம் மைதானத்தில் தேசியக் கொடியை குப்பை தொட்டியில் போட்ட காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தேசியக் கொடியை குப்பை தொட்டியில் போட்ட காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செம்பியம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றும் நாகராஜனை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் அக்.5ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது. போட்டி தொடங்கும் முன்பே சுமார் 12 மணி அளவில் ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே குவிந்தனர்.

சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மைதானத்திற்கு வரும் சில ரசிகர்கள் சர்ச்சையை கிளப்பும் விதமாக பதாகைகளை ஏந்தி வருவதாக லீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் காரணமாக ஒவ்வொரு ரசிகர்களும் தீவிர சோதனைக்கு பின் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மைதானத்திற்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் நாகராஜ் , ரசிகர்கள் கொண்டு வந்த இந்திய தேசிய கொடியை பறிமுதல் செய்து, அங்கிருக்கும் குப்பை தொட்டியில் போட முற்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே போட்டி நடைபெறுவதால் இந்திய தேசிய கொடியை உள்ளே கொண்டு செல்ல காவல்துறை அனுமதிக்கவில்லை என ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ சென்னை மாநகர காவல்துறை விளக்கமளித்துள்ளது. அதில் “சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், ஆப்கானிஸ்தான் -பாகிஸ்தான் போட்டியின் போது ஒன்றிய அரசை விமர்சிக்கும் விதமாகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதாகைகள் கொண்டு செல்வதை தடுக்கும் விதமாகவுமே காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் செம்பியம் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் அதை தவறாக புரிந்து கொண்டு, தேசிய கொடியை பறிமுதல் செய்து இருக்கிறார். ஆனால் உண்மையில் ரசிகர்கள் அனைவரும் தேசிய கொடியை மைதானத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்தனர். ரசிகர்கள் மைதானத்திற்குள் இந்திய தேசிய கொடியை கொண்டு செல்ல மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல்” என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தேசியக் கொடியை குப்பை தொட்டியில் போட்ட காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செம்பியம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றும் நாகராஜனை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

The post சேப்பாக்கம் மைதானத்தில் தேசியக் கொடியை குப்பை தொட்டியில் போட்ட காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Chepakkam Maidan ,Chennai ,Inspector ,Nagarajan ,
× RELATED வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில்