×

பயிர்கழிவுகள் எரிப்பு, தசரா, தீபாவளி உள்ளிட்டவற்றால் காற்று மாசு அபாயம்: டெல்லி அரசு தீவிர ஆலோசனை

டெல்லி: பயிர்கழிவுகள் எரிப்பு, தசரா, தீபாவளி உள்ளிட்டவற்றால் டெல்லியில் அடுத்த சில வாரங்களில் காற்று மாசு அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என அச்சம் எழுந்துள்ளது. தலைநகர் டெல்லியில் நிலவும் கடுமையான மூடுபனி மற்றும் காற்று மாசு காரணமாக கண் எரிச்சல், மூச்சு திணறலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் காற்று மாசு மிக மோசமான நிலைக்கு சென்று இருப்பதால் பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தி வரும் டெல்லி அரசு, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார பேருந்துகளின் சேவையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

தசரா கொண்டாட்டத்தில் உருவ பொம்மைகள் எரிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதும் டெல்லி மாசுவிற்கு முக்கிய காரணமாக உள்ளது. இது தொடர்பாக அண்டை மாநில அரசுகளுடன் பேசியுள்ள டெல்லி அரசு பயிர்கழிவு எரிப்பை கட்டுப்படுத்த வலியுறுத்தியுள்ளது. இதனிடையே ஒற்றை படை, இரட்டை படை பதிவெண் வாகன கட்டுப்பாடுகளை கொண்டு வரவும் டெல்லி அரசு ஆலோசித்து வருகிறது. மேலும், தீபாவளி நெருங்குவதால் டெல்லியில் காற்று மாசு அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

The post பயிர்கழிவுகள் எரிப்பு, தசரா, தீபாவளி உள்ளிட்டவற்றால் காற்று மாசு அபாயம்: டெல்லி அரசு தீவிர ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Tasara ,Diwali ,Delhi Government ,Delhi ,Dinakaran ,
× RELATED தீபாவளி சீட்டு நடத்தியவர் ₹13 லட்சம்...