×

பவானியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை உரிம மனுக்கள் மீது அதிகாரிகள் குழு நேரில் கள ஆய்வு

பவானி : பவானி தாலுகா பகுதியில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடை உரிமம் கோரி விண்ணப்பித்த மனுக்கள் மீதான கள ஆய்வில் அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு உரிமம் வழங்கக்கோரி இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு மாவட்டம், பவானி நகரம் மற்றும் கிராமங்களில் பட்டாசு கடைக்கு பெறப்பட்ட மனுக்கள் மீது ஊராட்சிக்கோட்டை, நிளவள வங்கி, திப்பிசெட்டிபாளையம், டிகேஆர் காம்பவுண்ட் பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது.

பவானி தாசில்தார் (பொ) வீரலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் மோகனா, தேர்தல் துணை வட்டாட்சியர் சரவணன், வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில், பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தீயணைப்பு நிலைய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின்போது, பட்டாசு கடை அமையும் பகுதியில் தீயணைப்பு பாதுகாப்பு பொருட்கள் வைத்திருக்க வேண்டும். 15 மீட்டர் தொலைவுக்கு எளிதில் தீ பிடிக்கும் தொழில் நிறுவனங்கள், வீடுகள் இருக்கக் கூடாது. 50 மீட்டர் தொலைவிற்கு மின்மாற்றி இருக்க கூடாது. அருகாமையில் உயர்ந்த மற்றும் தாழ்வழுத்த மின் கம்பிகள் செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட விதிகள் ஆய்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.

The post பவானியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை உரிம மனுக்கள் மீது அதிகாரிகள் குழு நேரில் கள ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Diwali ,Bhavani ,Diwali festival ,Bhawani taluk ,
× RELATED தீபாவளி சேமிப்பு சீட்டு கட்டிய பணத்தை...