×

அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக மற்றும் ப்ளூ காய்ச்சல் காரணமாக பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் அக்டோபர் மாதத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் இந்த மாதம் மட்டும் 16 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த ஆண்டு இதுவரை 5 ஆயிரம் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 5 உயிரிழந்துள்ளனர். நகரங்களில் வீடு வீடாகவும், கிராமப்புறங்களில் காய்ச்சலுக்கு வருவோரின் விவரங்களையும் சுகாதாரத்துறை சேகரித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெங்கு காய்ச்சலால் ஒரே மாதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் காய்ச்சல் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு: சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Health Department ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம்...