×

பெற்றோர்கள் வலியுறுத்தல் திருவாரூர் கராத்தே -கோபுடோ தற்காப்பு பயிற்சி வண்ணப்பட்டைக்கு வீரர்கள் தேர்வு

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முத்தூஸ் கராத்தே-கோபுடோ தற்காப்பு பயிற்சி பள்ளியில் வண்ணப்பட்டைக்கு வீரர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 190 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு இந்திய தலைமை பயிற்சியாளர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு சம்போ அசோசியேசன் செயலாளர் சதீஷ்குமார் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வண்ணபட்டை வழங்கினார். மாணவர்களுக்கு இன்றைய உடல்நலம் மனநலம் பற்றி கருத்துக்களை நல் நூலகர் ஆசை தம்பி தெரிவித்து மாணவர்களை நல்வழிப்படுத்தும் முறையினை பற்றி விளக்கினார். விஜயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் திருத்துறைப்பூண்டி, பள்ளங்கோவில் ஆலத்தம்பாடி, கச்சனம், கெளப்பாடு, எடையூர் ஆகிய பகுதிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post பெற்றோர்கள் வலியுறுத்தல் திருவாரூர் கராத்தே -கோபுடோ தற்காப்பு பயிற்சி வண்ணப்பட்டைக்கு வீரர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Tiruvarur Karate ,Kobuto ,Thiruthurapoondi ,Muthoos Karate ,Kobuto Martial Training School of ,Thiruvarur ,district ,Tiruvarur ,Karate ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை