×

புரட்டாசி முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை சென்னை காசிமேட்டில் மீன்வாங்க குவிந்த பொதுமக்கள்: வஞ்சிரம் கிலோ ரூ.700, நண்டு ரூ.500, சங்கரா ரூ.400 க்கு விற்பனை

சென்னை: புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேட்டில் நேற்று மீன் வாங்க கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம் கிலோ ரூ.700, நண்டு ரூ.500, சங்கரா ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். பெரும்பாலான இந்துக்கள், இந்த மாதத்தில் விரதம் இருப்பார்கள். அதனால், வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள். இதனால் மீன், மட்டன், சிக்கன் விற்பனை மந்தமாக நடைபெறுவது வழக்கம். மேலும் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புரட்டாசி மாதத்தில் கூட்டம் வழக்கத்தை விட வெகுவாக குறைந்து காணப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் புரட்டாசி மாதம் கடந்த 17ம் தேதியுடன் முடிந்தது. அது மட்டுமல்லாமல் புரட்டாசி மாதம் முடிந்து நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைவரும் வீட்டில் இருப்பது வழக்கம். இதனால் நேற்று காலை முதல் ஏராளமானோர் மீன்வாங்க காசிமேடு மார்க்கெட்டுக்கு படையெடுத்தனர். இதனால் காசிமேடு பகுதி முழுவதும் அதிகாலை முதல் மக்கள் கூட்டம் களை மோதியதை காண முடிந்தது.
சிறு வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்தால் 110 விசை படகுகள் வரை கரைக்கு திரும்பியது. அதில் பெரிய வகை, சிறிய வகை மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது. மீன்கள் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. மீன்கள் விலையும் சராசரியாக விற்கப்பட்டது.

இதில் நண்டு கடந்த வாரம் ரூ.350 விற்கப்பட்ட நண்டு நேற்று ரூ.500க்கு விற்கப்பட்டது. அதே போல் வஞ்சிரம் (கிலோ) ரூ.700, வவ்வால் ரூ.450, கடமா ரூ.450, இறால் ரூ.400, சங்கரா பெரியது ரூ.400க்கும் விற்க்கப்பட்டது. புரட்டாசி மாதம் முடிந்தாலும் நவராத்திரி விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் அதிகமானோர் இன்னும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார்கள். எனவே நவராத்திரி விழா முடிந்த பிறகு மீன்கள் விலை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இதே போல புரட்டாசி மாதம் முடிந்ததையடுத்து நேற்று மட்டன், சிக்கன் கடைகளிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

The post புரட்டாசி முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை சென்னை காசிமேட்டில் மீன்வாங்க குவிந்த பொதுமக்கள்: வஞ்சிரம் கிலோ ரூ.700, நண்டு ரூ.500, சங்கரா ரூ.400 க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Puratasi ,Kasimet ,Chennai ,Sankara ,Chennai Kasimet ,Vanchiram ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...