×

போட்டி அரசு நடத்த நினைக்கிறார் ஆளுநர்: இந்திய தேசிய லீக் கண்டனம்

மதுரை: இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பஷீர் அகமது தலைமை வகித்தார்.  கூட்டத்தில், ‘‘தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இடஒதுக்கீடு வழங்க வேண்டும். காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறோம். ஆளுநர் ரவி ஆரம்பம் முதல் தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்குடன் செயல்பட்டு, போட்டி அரசு நடத்த நினைப்பது கண்டிக்கத்தக்கது.

சித்தா பல்கலைகழகம் அமைப்பது உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதை கண்டிக்கிறோம். பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர், தமிழ்நாடு அரசுக்கெதிராக பொய் மூட்டைகளை அவிழ்த்து, அறமற்ற அரசியலில் ஈடுபடுகின்றனர். ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், பிரிவினையை தூண்டும் விதமாக வதந்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்புகின்ற இவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post போட்டி அரசு நடத்த நினைக்கிறார் ஆளுநர்: இந்திய தேசிய லீக் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Indian National League ,Madurai ,Indian ,National League ,State President ,Basheer Ahmed ,Dinakaran ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...