×

ஒரே தேர்தல் சாத்தியம் இல்லை: சீமான் கருத்து

போளூர்: திருவண்ணாமலை மாவட்ட நாதக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் போளூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற தலைைம ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி: நீட்தேர்வு ரத்து கோரி திமுகவின் கையெழுத்து இயக்கம் ஒன்றிய அரசு மாற்றம் வரும்போது தந்தால் நல்லது. சாதிவாரி கணக்கெடுப்பு தமிழகத்தில் எடுத்தால் பூர்வகுடி தமிழர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற உண்மை தெரிந்துவிடும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவில் நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லை. ஆனால், வெளிநாடுகளில் இருப்பது போன்று தேர்தல் சீர்திருத்தம் இந்தியாவில் கொண்டு வருவது அவசியம். ஊழல் தேசியமயமாகிவிட்டது. இதனை தடுக்க தேர்தலுக்கு தேர்தல் சின்னத்தை மாற்ற வேண்டும். எந்த கட்சிக்கும் நிரந்தர சின்னம் இருக்கக்கூடாது. எத்தனை தேர்தல் வந்தாலும் நாதக தனித்தே போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒரே தேர்தல் சாத்தியம் இல்லை: சீமான் கருத்து appeared first on Dinakaran.

Tags : Seeman ,Polur ,Thiruvannamalai ,Chief coordinator ,Dinakaran ,
× RELATED நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி...