×

குலசை கடற்கரையில் பெற்றோருடன் தூங்கிய 2 வயது குழந்தை கடத்தல்

உடன்குடி: குலசேகரன்பட்டினம் கடற்கரையில் பெற்றோருடன் தூங்கிய 2 வயது பெண் குழந்தை கடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவையொட்டி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஊசி, பாசி விற்கும் சமுதாய மக்கள் கடற்கரையில் அதிக அளவில் முகாமிட்டுள்ளனர்.

இங்கு மதுரை சவுந்திரபாண்டியநகர் சக்கிமங்களத்தை சேர்ந்த அம்சவள்ளி (36), தனது 4 குழந்தைகளுடன் வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு குழந்தைகளுடன் கடற்கரையில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோயில் பகுதியில் தூங்கியுள்ளார்.

நேற்று அதிகாலை 2 மணி அளவில் கடற்கரை பகுதிக்கு டூ வீலரில் வந்த 2 பேர் அம்சவள்ளியின் 2 வயது பெண் குழந்தை கார்த்திகாவள்ளியை தூக்கிச் சென்றனர். பின்னர் எழுந்தவர் குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்தார். எங்கு தேடியும் கிடைக்காததால் குலசேகரன்பட்டினம் போலீசில் அம்சவள்ளி புகார் செய்தார்.

போலீசார் வழக்குப் பதிந்து, பஜாரில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குலசேகரன்பட்டினம் தசரா விழாவுக்கு மாலை அணிந்து விரதம் இருக்க வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராஜ் – ரதி தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post குலசை கடற்கரையில் பெற்றோருடன் தூங்கிய 2 வயது குழந்தை கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Kulasai beach ,Udengudi ,Kulasekaranpattinam beach ,Tuticorin District ,Kulasekaranpatnam Mutharamman ,Temple ,
× RELATED குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில்...