×

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்: வானிலை மையம் தகவல்

டெல்லி: மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறக் கூடும் எனவும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு அரபி கடலில் நிலைகொண்டுள்ள ‘தேஜ்’ புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 19ம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. நேற்று முன் தினம் காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவியது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும், இது மேலும் வலுவடைந்து தீவிர புயலாக நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் தெரிவித்திருந்தது.

தென்மேற்கு அரபி கடலில் நிலைகொண்டுள்ள ‘தேஜ்’ புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேஜ் புயல் நேற்றிரவு 11.30 மணியளவில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு அரபி கடலில், சகோத்ரா (ஏமன்) நகருக்கு 330 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், சலாலா (ஓமன்) நகருக்கு 690 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் மற்றும் அல் கைடா (ஏமன்) நகருக்கு 720 கி.மீ. தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.

இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறக் கூடும் எனவும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது எனவும் நாளை வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து 25-ம் தேதி வங்கதேசம் அருகே கரையை கடக்கக் கூடும் எனவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bank Sea ,Meteorological ,Delhi ,Midwest Bank Sea ,Weather Center ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 3...