×

திருவல்லிக்கேணி அடகு கடையில் 4.25 கிலோ தங்கம், ரூ.50 லட்சம் கையாடல் செய்த ஊழியர் கைது: முக்கிய குற்றவாளிக்கு வலை

சென்னை: திருவல்லிக்கேணி அடகு கடையில் 4.25 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.50 லட்சத்தை கையாடல் செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர். சென்னை பூங்கா நகர், வெங்கடாச்சல முதலி தெருவில் வசிக்கும் விமல்குமார் ஜெயின் (63) என்பவர், திருவல்லிக்கேணி, வி.ஆர்.பிள்ளை தெருவில் அடகு கடை நடத்தி வருகிறார். இவர், சில மாதங்களுக்கு முன்பு கடையின் கணக்கு வழக்குகளை சரி பார்த்தபோது, கடையில் இருந்த 4.25 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.50 லட்சம் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து, ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அந்த கடையில் சுமார் 15 வருடங்களாக பணிபுரிந்து வரும் ராஜஸ்தானை சேர்ந்த மங்கிலால் என்பவர், மற்றொரு ஊழியரான குருபிரசாத் என்பவருடன் சேர்ந்து, தங்க நகைகள் மற்றும் பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது.இதையடுத்து, கே.கே.நகர் டபுள் டேங்க் காலனியை சேர்ந்த குருபிரசாத்தை (41) கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான மங்கிலாலை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட குருபிரசாத்தை, நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

The post திருவல்லிக்கேணி அடகு கடையில் 4.25 கிலோ தங்கம், ரூ.50 லட்சம் கையாடல் செய்த ஊழியர் கைது: முக்கிய குற்றவாளிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Tiruvallikeni Pawn shop ,Chennai ,Tiruvallikeni ,
× RELATED திருவல்லிக்கேணியில் தொடரும்...