×

மெட்ரோ ரயில் ஊழியரிடம் வழிப்பறி

அண்ணாநகர்: கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரய்யா (24). சென்னை கொளத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, பாடி அருகே மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், வீரய்யாவை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த பணம், செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். புகாரின்பேரில், திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.

அதில், அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த மணிரத்தினம் (எ) கேடி மணி (24), இவரது கூட்டாளி 17 வயது சிறுவன் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து பணம், செல்போன், பைக் மற்றும் பட்டாகத்தியை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கேடி மணியை புழல் சிறையிலும், சிறுவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.

The post மெட்ரோ ரயில் ஊழியரிடம் வழிப்பறி appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Veeraiah ,Cuddalore district ,Chennai ,Kolathur ,Padi Metro ,Metro ,Dinakaran ,
× RELATED திருமங்கலத்தில் பரபரப்பு குப்பை தொட்டியில் மனித எலும்பு கூடு