×

ககன்யான் ஆராய்ச்சி வீண் செலவு என்கிறார் சீமான்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அளித்த பேட்டி: அதிமுகவில் இருந்து கூட்டணிக்கு அழைப்பார்கள், இன்னும் நாள் உள்ளது. பிறகு தான் அதை பற்றி பேச வேண்டும். ககன்யான் விண்கலம் தொடர்பாக, இந்தியா மேற்கொள்ளும் ஆராய்ச்சியால் நமக்கு என்ன பயன்?. இந்த ஆராய்ச்சி எல்லாம் வீண் செலவு. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், வாக்கை இயந்திரத்தில் போட்டுவிட்டு, மனித கழிவை மனிதன் அள்ளும் நிலை உள்ளது. சூரியனை சுற்றி ஆராய்ச்சி செய்து என்ன ஆக போகிறது?. நாடாளுமன்ற தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி சேருவதற்கான வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post ககன்யான் ஆராய்ச்சி வீண் செலவு என்கிறார் சீமான் appeared first on Dinakaran.

Tags : Seeman ,Gaganyan ,Krishnagiri ,Naam Tamilar Party ,Parkur, Krishnagiri district ,AIADMK ,Kaganyan ,Dinakaran ,
× RELATED ககன்யான்: கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி..!!