×

கூடுதல் கட்டணம் புகார் எதிரொலி 102 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

சென்னை: ஆயுத பூஜை விடுமுறையை யொட்டி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில பேருந்துகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளனர். இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும், விதிமுறைகளை மீறும் ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து துறை அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் விதிகளை மீறிய 1,545 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.27 லட்சத்து 67 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருகிறது. மேலும் பண்டிகை நாட்கள் தவிர சாதரண நாட்களிலும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனைகளை நடத்தி வருகின்றனர். மேலும் பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டண வசூல்களை தடுக்க சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, கடந்த அக்.18ம் தேதி முதல் நேற்று வரை 8,635 ஆம்னி பேருந்துகளில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் விதிகளை மீறிய 1,545 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அந்த பேருந்துகளுக்கு ரூ.27,67,100 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.15,41,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த பேருந்துகள் ரூ.24 லட்சம் வரி செலுத்தாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ரூ.7,54,185 வசூலிக்கப்பட்டது. மேலும் 102 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கூடுதல் கட்டணம் புகார் எதிரொலி 102 ஆம்னி பஸ்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Ayudha Puja holiday ,Dinakaran ,
× RELATED இனிப்பில் மயக்க மருந்து கலந்து...