×

சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தில் கைதான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 8 பேருக்கு ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தடை ெசய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை சேர்ந்த, கைதான 13 பேரில் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பரக்கத்துல்லாஹ், மாநில பேச்சாளர் அகமது இட்ரிஸ் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து 8 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் டி.மோகன், ஐ.அப்துல் பாஷித், வழக்கறிஞர் ஏ.ராஜா முகமது ஆகியோர் ஆஜராகி, ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி வாதிட்டனர். என்.ஐ.ஏ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் சிறப்பு வழக்கறிஞர் ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர். விஷன் இந்தியா 2047 என்கிற அபாயகரமான நோக்கத்துடன் செயல்பட்டதாலேயே பி.எஃப்.ஐ. அமைப்பை ஒன்றிய அரசு தடை செய்துள்ளது.

மனுதாரர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. அது தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று கூறி அந்த ஆதாரங்களை தாக்கல் செய்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எட்டு பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். எட்டு பேரும் ஒரு லட்ச ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதத்தை தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் சென்னையில் தங்கியிருந்து தினமும் காலை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட் இருந்தால் அதை ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்தனர்.

The post சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தில் கைதான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 8 பேருக்கு ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Popular ,India ,Chennai ,Ramanathapuram district ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...