×

தக்காளி டிரேக்களின் அடியில் வைத்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்

*2 பேர் கைது: 3 பேருக்கு ேபாலீஸ் வலை

வேலூர் : லாரியில் தக்காளி டிரேக்களின் அடியில் வைத்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3.05 டன் ரேஷன் அரிசிைய உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் லாரியுடன் கைப்பற்றி 2 பேைர கைது செய்தனர். 3 ேபரை தேடி வருகின்றனர்.வேலூர் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி நந்தகுமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா, ஏட்டு ராஜவேல், முதல்நிலை காவலர் வெங்கடேசன் கொண்ட குழுவினர் நேற்று அதிகாலை 5 மணியளவில் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த எயிஷர் லாரியை மடக்கி சோதனையிட்ட போது லாரியில் அடுக்கி வைக்கப்பட்ட தக்காளி டிரேக்களின் அடியில் சிறிய மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த முயன்றதும், அதற்காக வேலூருக்கு தக்காளி ஏற்றி வரும் லாரியை பிடித்து சந்தேகம் வராத வகையில் தக்காளி டிரேக்களின் அடியில் வைத்து கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து லாரியுடன் அரிசியை கைப்பற்றிய உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், லாரியில் இருந்த சத்துவாச்சாரி நேரு நகர் மலையடிவாரம் பகுதியை சேர்ந்த மனோகர்(43), ஜெகதீஷ்(33) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்யப்பட்ட 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகள் வேலூர் சிவில் சப்ளை குடோனில் ஒப்படைக்கப்பட்டன.

The post தக்காளி டிரேக்களின் அடியில் வைத்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Vellore ,Andhra ,
× RELATED ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என...