×

மூலப்பொருள் விலை உயர்வால் செங்கல் சூளை தொழில் பாதிப்பு: அரசு கடனுதவி வழங்க கோரிக்கை

வருசநாடு: மூலப்பொருட்களின் விலை உயர்வால், மயிலாடும்பாறை பகுதியில் செங்கல் சூளை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு கடன் உதவி வழங்க வேண்டும் என சூளை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடும்பாறை பகுதியில் மூலக்கடை, சோலைத்தேவன்பட்டி, உப்புத்துறை, தங்கம்மாள்புரம் வருசநாடு, தும்மக்குண்டு, குமணன்தொழு ஆகிய பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக செங்கல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பகுதியில் தயாரிக்கப்படும் செங்கற்களை திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.இந்நிலையில், செங்கல் தயாரிப்புக்கு தேவையான விறகு, மணல், கரம்பைமண் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் உற்பத்தி செலவை கூட ஈடு கட்ட முடியாத நிலை உள்ளதாகவும், பொருளாதார சிக்கலால் செங்கல் சூளைகள் நலிவடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதனால், செங்கல் சூளைகள் தொடர்ந்து மூடப்பட்டு வருவதாகவும், அவற்றின் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து மயிலாடும்பாறை சேர்ந்த வனராஜ் கூறுகையில், ‘செங்கல் சூளை நடத்துபவர்களுக்கு அரசு சார்பில் வங்கிகளில் கடனுதவி வழங்க ஏற்பாடு ெசய்து தர வேண்டும். இல்லையென்றால் செங்கல் சூளைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும். இது தொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்….

The post மூலப்பொருள் விலை உயர்வால் செங்கல் சூளை தொழில் பாதிப்பு: அரசு கடனுதவி வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Mayiladumpara ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து