×

எதிர்மறை விமர்சனம் மூலம் எதிரிகளை வீழ்த்துவதை விட நேர்மறை விமர்சனம் மூலம் கட்சியை வளர்ப்பதே சரியானது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: எதிர்மறை விமர்சனம் மூலம் எதிரிகளை வீழ்த்துவதை விட நேர்மறை விமர்சனம் மூலம் கட்சியை வளர்ப்பதே சரியானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை செனாய் நகரில் சமூக வலைதள தன்னார்வலர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். நீட் விலக்கு – நம் இலக்கு கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்துத் தந்த பாதையில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பக்குவப்பட்ட காலத்தில் பிறந்தவன் ஸ்டாலின் என என்னை கலைஞர் கூறினார் என முதலமைச்சர் தெரிவித்தார்.

The post எதிர்மறை விமர்சனம் மூலம் எதிரிகளை வீழ்த்துவதை விட நேர்மறை விமர்சனம் மூலம் கட்சியை வளர்ப்பதே சரியானது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,Uddhav Thackeray ,Mu K. Stalin ,
× RELATED பிஜேபியின் சூழ்ச்சித்...