×

கோத்தகிரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான்

 

கோத்தகிரி,அக்.21: கோத்தகிரி என் பிஏ பாலிடெக்னிக்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. கல்லூரியில் துவங்கி ராம்சந்த், காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பஸ் நிலையம், காம்பாய் கடை, மிஷின் காம்பவுண்ட் வழியாக மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக போட்டியை இந்தியா ஹாக்கி அணியின் வீடியோ பகுப்பாளர் அசோக்குமார் மற்றும் கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் எபினேசர் ஆகியோர் துவக்கி வைத்தனர். அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. முன்னதாக ஹாக்கி வீரர் அசோக்குமாருக்கு, ராம்சந்த் வியாபாரி சங்கத்தின் தலைவர் லியாகத் அலி தலைமையில் வியாபாரி சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.

மாநில ஹாக்கி போட்டிகளில் பங்கேற்ற அசோக்குமார், டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வீரர்களுடன், கானொலி பகுத்தாய்வாளராக (வீடியோ அனலிஸ்ட்) பணியாற்றினார். இதில் இந்திய அணி வெண்கலம் வென்று நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

The post கோத்தகிரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான் appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,NPA Polytechnic ,awareness ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்