×

பெட்டிக்கடையில் திருட முயன்ற வாலிபர் கைது

சேலம், அக்.21: சேலத்தை அடுத்துள்ள நிலவாரப்பட்டி அய்யனாரப்பன் கோயில் காடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (54). இவர், நிலவாரப்பட்டியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடந்த 18ம் தேதி இரவு வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டி விட்டு சண்முகம் வீட்டிற்கு சென்றார். அடுத்தநாள் அதிகாலையில், அந்த பெட்டிக்கடையின் பூட்டை, வாலிபர் ஒருவர் உடைத்துள்ளார். இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர், சண்முகத்திற்கு தகவல் கொடுத்துவிட்டு, அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் தப்பியோடி விட்டார். கடைக்கு சண்முகம் வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. ஆனால், பொருட்கள் ஏதும் திருடு போகவில்லை. இதுபற்றி மல்லூர் போலீசில் சண்முகம் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், பெட்டிக்கடை பூட்டை உடைத்து திருட முயன்றது, சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த வேலன் (எ) வேலவன் (20) எனத் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

The post பெட்டிக்கடையில் திருட முயன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Sanmugam ,Nilwarpatti Ayyanarappan Temple forest ,Nilwarpatti ,Dinakaran ,
× RELATED விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு