×

மர்மமான முறையில் இறந்த காட்டுப்பன்றி வனத்துறையினர் விசாரணை ஒடுகத்தூர் அருகே ஊனை வாணியம்பாடியில்

ஒடுகத்தூர், அக்.21: ஒடுகத்தூர் அருகே ஊனை வாணியம்பாடியில் விவசாய நிலத்தில் மர்மமான முறையில் காட்டுப்பன்றி இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊனை வாணியம்பாடி பகுதியில் தமிழ்செல்வன் என்பவரின் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தற்போது நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்செல்வன் நிலத்தில் காட்டுப்பன்றி மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு நேற்று காலை தகவல் கொடுத்தார். அதன்படி வனச்சரக அலுவலர் இந்து தலைமையிலான அதிகாரிகள் விவசாய நிலத்திற்கு வந்தனர். அப்போது, 80 கிலோ எடையுள்ள ஆண் காட்டுப்பன்றி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அதனருகே காட்டுப்பன்றி சிறிது தூரம் இழுத்து வரப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. எனவே, காட்டுப்பன்றியை யாரேனும் இறைச்சிக்காக அடித்துக்கொன்றார்களா? அல்லது நாய்கள் கடித்து கொன்றதா? என சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து கால்நடை மருத்துவரை வரவழைத்து உடற்கூறு ஆறு செய்தனர். பின்னர் அதே இடத்தில் அடக்கம் செய்தனர். காட்டுப்பன்றி இறந்தது குறித்து ஒடுகத்தூர் வனச்சரக அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post மர்மமான முறையில் இறந்த காட்டுப்பன்றி வனத்துறையினர் விசாரணை ஒடுகத்தூர் அருகே ஊனை வாணியம்பாடியில் appeared first on Dinakaran.

Tags : Una Vaniyampadi ,Odukatur ,Dinakaran ,
× RELATED ஒடுகத்தூர் பாக்கம் கிராம கைலாயநாதர்...