×

தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த புதுமாப்பிள்ளை பலி: அம்பத்தூரில் ேசாகம்

அண்ணாநகர்: மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (23). அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (23). நண்பர்களான இவர்கள், அம்பத்தூர் பகுதியில் கூலி வேலை செய்து வந்தனர். கடந்த 15ம் தேதி வேலை முடிந்து அம்பத்தூரில் இருந்து கோயம்பேட்டுக்கு பைக்கில் புறப்பட்டனர். மதுரவாயல் மேம்பாலம் மீது அதிவேகத்தில் சென்றபோது, நிலைதடுமாறிய பைக் தாறுமாறாக ஓடி மேம்பால தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில், பின்னால் அமர்ந்திருந்த பிரசாந்த், 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலை, கை, கால்களில் பலத்த ஏற்பட்டது. ராஜேஷின் 2 கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. படுகாயமடைந்த இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, நேற்று காலை சிகிச்சை பலனின்றி பிரசாந்த் பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார், பிரசாந்த் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ராஜேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் இறந்த பிரசாந்த், கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் காதலித்த பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த புதுமாப்பிள்ளை பலி: அம்பத்தூரில் ேசாகம் appeared first on Dinakaran.

Tags : Pudumappillai ,Jesagam ,Ambattur Annanagar ,Rajesh ,Maduravayal ,Prashant ,Ambattur ,Ampathur ,Jesakam ,
× RELATED விருந்து வைப்பதற்காக மறுவீடு அழைத்து...