×

கர்நாடக அரசை கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: மல்லை சத்யா பங்கேற்பு

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காந்திசாலை பெரியார் தூண் அருகே கர்நாடகா மாநிலம் காவிரியில் தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர மறுப்பதை கண்டித்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை கர்நாடகவிற்கு வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி பாலாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன் தலைமையில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், மதிமுக மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா கலந்துகொண்டு பேசுகையில், ‘நமக்கு பகை நாடாக கருதும் பாகிஸ்தான் இந்தியா இடையே ஓடும் சிந்து நதிக்கு ஒரு தடையும் இல்லை. வடநாட்டு மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறுகளுக்கும் தடையில்லை. ஆனால், தமிழகத்தில் பாஜ கால் ஊன்றாத நிலையில் கர்நாடகாவில் மாறி மாறி ஆட்சி அமைக்கும் பாஜ அம்மாநிலத்திற்கு ஆதரவாக துணை போவது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது’ என்றார்.

பின்பு கூட்டத்தில், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி, கருணாகரன் மற்றும் சலிம் கான், பொன்மொழி, முரளி, சீனிவாசன், வெங்கடேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post கர்நாடக அரசை கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: மல்லை சத்யா பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Madhyamik ,Karnataka government ,Mallai Satya ,Kanchipuram ,Periyar ,Cauvery ,Tamil Nadu ,
× RELATED மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு...