×

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு

பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொன்னேரி தொகுதி ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொன்னேரி தொகுதி ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை பொன்னேரியில் உள்ள திருமண மண்டபத்தில், மாவட்ட கழக செயலாளர் கும்மிடிப்பூண்டி டி. ஜெ. கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் பகலவன், ஒன்றிய செயலாளர்கள் வல்லூர் ரமேஷ்ராஜ், காணியம்பாக்கம் ஜெகதீசன், பொன்னேரி சுகுமாரன், வழுதிகைமேடு செல்வசேகரன், பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், கோளூர் கதிரவன், மீஞ்சூர் தமிழ் உதயன், ஆரணி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்னேரி நகர செயலாளர் ரவிக்குமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி பொறுப்பாளர் அமுத அரசன் கலந்துகொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தேர்தல் பணி குறித்து விளக்கம் அளித்தார். மாவட்ட செயலாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் பேசும்போது, நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் ஒப்படைக்க வேண்டும், தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பாரதிய ஜனதாவை நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் புறக்கணிக்கின்றன. யார் பிரதரமாக உருவாக்க வேண்டும் என, தமிழ்நாடு முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் திமுக ஆட்சியில் மகளிருக்கு ரூ.1000, காலை உணவு திட்டத்தை பற்றி தான் அனைத்து ஆங்கில நாளேடுகளில் வெளியிடப்படுகிறது. பொன்னேரி தொகுதியில் உள்ள ஒன்றிய,பேரூர் கழகத்தில் 311 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில், வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் குழுக்களை அமைத்து வாக்குகள் சிதறாமல் சேகரிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்கல் ஆகியவற்றில் முதலில் சரி செய்ய வேண்டும். ஒவ்வொரு திமுக உறுப்பினரும் பொறுப்புகளை பார்க்காமல், திமுக தொண்டனாக அனைவரும் செயல்பட்டால், நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி என பேசினார்.

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,DJ Govindarajan ,Ponneri ,Thiruvallur East District ,DMK Ponneri Constituency Union ,Nagar, Perur ,Dinakaran ,
× RELATED எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன்,...