×

நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதி: போலீசில் பெண்கள் புகார்

செங்கல்பட்டு: நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கிணற்றை தூர் வாராததால் கடந்த 10 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதிப்பட்டு வருவதாக பெண்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ஸ்டெர்லிங் அடுக்குமாடி குடியிருப்பில் 372 குடும்பத்தினர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர்.

இதில், எங்களுக்கு என்று ஒரு குடிநீர் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அந்த கிணறு கடந்த 10 ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் சேறும், சகதியுமாகவும், செத்துப் போன எலிகள் மற்றும் குப்பை, கூளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீரின்றி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றோம். இதனை நகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை.

மக்களே ஒன்று சேர்ந்து தூர்வார நினைத்தால் குடியிருப்போர் நல சங்க தலைவராகவும், மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் விமலா என்பவர் தூர்வார விடாமல் தடுத்து நிறுத்தி வருகிறார் என அதில் கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

The post நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதி: போலீசில் பெண்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : Nandivaram ,Kuduvanchery ,Chengalpattu ,Kuduvancheri ,Sterling Flats ,
× RELATED காட்டூர்-அண்ணா நகர் சாலை ஓரத்தில்...