×

அரசை விட அதிகாரமா?கவர்னருக்கு சீமான் கண்டனம்

தர்மபுரி: தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆளுநருக்கு சங்கரய்யா யார் என்று தெரியுமா?, மக்களால் தேர்ந்தெடுத்த பிரிதிநிதிகளுக்கு என்ன மரியாதை?. 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இல்லாத அதிகாரம், நியமனம் செய்யப்பட்ட தனி ஒருவருக்கு எப்படி வந்தது?. பங்காரு அடிகளார் இறப்பு என்பது பேரிழப்புதான். நானே கருவறையில் மணி ஆட்டி பூஜை செய்திருக்கிறேன். அப்படிப்பட்டவரின் இழப்பு தமிழ் இனத்திற்கு பேரிழப்புதான். அதை ஈடே செய்ய முடியாது. தேர்தலில் வெல்லணும் என்பதே எங்களின் இலக்கு. ஈழத்தில் என்ன நடந்ததோ, அதே தான் பாலஸ்தீனத்தில் நடந்து வருகிறது. அவர்கள் தங்களின் மண்ணுக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post அரசை விட அதிகாரமா?கவர்னருக்கு சீமான் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Seeman ,Dharmapuri ,Naam Tamilar Party ,Sankarayya ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்...